தலைநகர் பரிசில் இருந்து Lille நகருக்கு மிக குறைந்த கட்டணத்தில் தொடருந்தில் பயணிக்கலாம்.
ஒவ்வொரு வாரத்திலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த புதிய தொடருந்து இயங்க உள்ளது. SNCF அறிமுகப்படுத்தும் புதிய TER தொடருந்து பரிசில் இருந்து Lille நகருக்கு வெறும் €10 யூரோக்களில் உங்களை அழைத்துச் செல்லும்.
வழக்கமாக இவ்விரு நகரங்களை இணைக்கும் TGV தொடருந்து ஒரு மணிநேரத்தில் பயணிக்கும். ஆனால் இந்த குறைந்த கட்டண தொடருந்து 2 மணிநேரங்களும் 20 நிமிடங்களும் எடுத்துக்கொள்ளும்.
சனி ஞாயிறுகளில் நாள் ஒன்றுக்கு இரண்டு சேவைகள் வீதம் இத்தொடருந்துகள் இயக்கப்பட உள்ளன. வரும் ஜனவரி 16 (சனிக்கிழமை) முதல் தொடருந்து இயக்கப்பட உள்ளது.