Sun. Jan 17th, 2021

காவல்துறையினரிடம் இருந்து தப்பி ஓடிய இளைஞன் ஒருவர் விபத்துக்குள்ளாகி சாவடைந்துள்ளார். 

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை Nice, Alpes-Maritimes நகரில் இடம்பெற்றுள்ளது. இரவு 10 மணி அளவில் வீதி கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். அதன் போது இளைஞன் ஒருவர் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர். 

ஆனால் இளைஞன் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் தொடர்ந்து பயணித்துள்ளார். இதனால் காவல்துறையினர் பின்னால் துரத்திச் சென்றனர். 

தப்பிச் சென்ற இளைஞன் அங்குள்ள பிரபலமான சுரங்க பாதையான André-Liautaud இற்குள் நுழைந்துள்ளார்.

ஆனால் துரஷிட்டவசமாக இளைஞன் கட்டுப்பாட்டை இழந்து சுரங்கப்பாதையின் சுவற்றில் மோதுண்டு விபத்துக்குள்ளானார். பலத்த காயமடைந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார். 

20 வயதுடைய குறித்த இளைஞன் ஓட்டுனர் உரிமம் இன்றி பயணித்துள்ளதாகவும், குறித்த இளைஞனை காவல்துறையினர் முன்னதாக இதே குற்றத்துக்காக அறிவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

share

By Editor

error: Alert: Content is protected !!