கொரோனா வைரஸ் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை பதிவான தொற்று மற்றும் சாவு விபரங்கள் இதோ :
கடந்த 24 மணிநேரத்தில் 15,944 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த சில நாட்களை விட மிக குறைவாகும்.
அதேவேளை, 151 பேர் கடந்த 24 மணிநேரத்தில் சாவடைந்துள்ளனர். முன்னதாக சனிக்கிழமை 171 பேர் சாவடைந்திருந்தனர்.
மொத்த சாவு எண்ணிக்கை 67,750 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 47,134 பேர் மருத்துவமனையில் சாவடைந்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது 24,526 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2,620 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.