மிதிவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த சிறுவன் ஒருவன் சாவடைந்துள்ளான்.
இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை Vésinet, Yvelines நகரில் இடம்பெற்றுள்ளது. காலை 8.30 மணி அளவில் இங்குள்ள avenue d’Alsace வீதியில் சிறுவன் ஒருவன் மிதிவண்டியில் பயணித்துள்ளான். அப்போது திடீரென எதிர்ப்பட்ட கனரக வாகனம் ஒன்று குறித்த சிறுவன் மீது மோதி தள்ளியது.
இதில் விபத்துக்குள்ளான சிறுவன், படு காயமடைந்து சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளான். சிறுவன் அங்குள்ள lycée Alain இல் கல்வி கற்கின்றான் எனவும், 16 வயதுடையவன் எனவும் அறிய முடிகிறது.
கனரக வாகனத்தை ஓட்டிச் சென்ற 53 வயதுடைய சாரதிக்கு மதுசாரம பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.