Sun. Jan 17th, 2021

போதை மருந்து விற்பனை செய்து வந்த இரு பெண்கள் பரிசில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஜனவரி 9 ஆம் திகதி இவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு போதை மருந்து விற்பனை செய்துள்ளனர். இவர்கள் தொடருந்து நிறுவனமான RATP நிறுவனத்தில் பணி புரிகின்றனர். இவ்விரு பெண்களும் தங்கள் நிறுவனத்தின் சீருடையுடன், பணியில் இல்லாத நேரத்தில் போதை மருந்தை விற்பனை செய்துள்ளனர். சீருடை அணிந்திருந்தால் இலகுவில் சந்தேகம் எழாது என்பதால் இந்த செயலில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். பரிசில் அவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, தேசிய அளவில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

காவல்துறையினர் ஒரு புறம்விசாரணைகளை தொடர, மறுபக்கம் RATP நிறுவனத்துக்குள்ளும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டதுடன், அதில் ஒருவருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் (இன்று திங்கட்கிழமை) வழங்கப்பட்டது.

share

By Editor

error: Alert: Content is protected !!