கொரோனா நோயாளிகளுக்கு தடுப்பூசி போடப்படும் விபரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரசுக்கான தடுப்பூசிகள் வழங்கப்படுவதில் ‘வெளிப்படைத் தன்மை இல்லை’ என பலர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த விபரங்களை உத்தியோகபூர்வமாக வெளியிட அரசு தீர்மானித்துள்ளது. அதைத் தொடர்ந்து, தினமும் மாலை 7.30 மணி அளவில் அன்றைய நாளுக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்களை அரசு வெளியிடும் என நேற்று செவ்வாய்க்கிழமை சுகாதார அமைச்சர் Olivier Véran அறிவித்துள்ளார்.
‘விபரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படையாக காட்சிப்படுத்தப்படும்!’ என Olivier Véran அறிவித்தார்.