இல் து பிரான்சுக்குள் இதுவரை கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டவர்களின் விபரங்கள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன.
முதியவர்கள், முதியோர் இல்லங்களில் வசிக்கும் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாத்திரமே இதுவரை தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றது. கடந்த டிசம்பர் 26 ஆம் திகதி இல் து பிரான்சுக்குள் முதன் முறையாக கொரோனா தடுப்பு மருந்து போடப்பட்டது. அன்றி இருந்து ஜனவரி 11 ஆம் திகதி (இன்று) வரை 30,248 பேருக்கு இதுவரை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
பிரான்சில் அதிக தடுப்பூசிகள் போடப்பட்ட மாகாணமாக இல் து பிரான்ஸ் உள்ளது. அதற்கு அடுத்ததாக Nouvelle-Aquitaine மாகாணம் (18.841 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன) உள்ளது.
மொத்தமாக பிரான்சில் 138,000 பேருக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இன்று திங்கட்கிழமை இல் து பிரான்சுக்குள் புதிதாக இரண்டு தடுப்பூசிகள் போடும் மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் வாரங்களில் மேலும் பல தடுப்பூசி மையங்கள் திறக்கப்பட உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.