Sun. Jan 17th, 2021

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 97 வயதுடைய முதியவர் ஒருவர் முற்றாக குணமடைந்துள்ளார். 

இச்சம்பவம் Haute-Garonne நகரில் இடம்பெற்றுள்ளது. Haute-Garonne எனும் 97 வயதுடைய முதியவர் Blagnac,  Haute-Garonne நகரில் வசிக்கின்றார். இவர் அண்மையில் பரிசுக்கு வந்து சென்றிருந்த போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி, அவர்  ஒரு மாத காலம் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்தார். 

ஒரு மாத கால போராட்டத்தின் பின்னர் அவர் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இவர் ஒரு முன்னாள் இராணுவ வீரர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

97 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனா பிடியில் இருந்து தப்பித்துள்ளமை மருத்துவ உலகத்துக்கு புது நம்பிக்கையை கொடுத்துள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

share

By Editor

error: Alert: Content is protected !!