கோர விபத்து ஒன்றில் சிக்கி ஜொந்தாம் அதிகாரி ஒருவர் சாவடைந்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை காலை இச்சம்பவம் Saint-Astier, Dordogne நகரில் இடம்பெற்றுள்ளது. Saint-Léon-sur-l’Isle எனும் சிறு நகரில் குறித்த காவல்துறை அதிகாரி தனது மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருக்கும் போது, அதே வீதியில் வேகமாக பயணித்த BMW மகிழுந்து ஒன்று பனிக்கட்டியில் சறுக்கி, ஜொந்தாம் அதிகாரி பயணித்த மகிழுந்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
உதவிக்குழுவினர் விரைவாக தலையிட்டு ஜொந்தாம் அதிகாரியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதும், அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. அவர் சிகிச்சை பலனின்றி சாவடைந்துள்ளார்.
சாவடைந்த அதிகாரி Jérémy A. எனும் 27 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதி ஜொந்தாமினரால் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.