இல்-து-பிரான்சிற்குள், 11 பேரிற்கு, மிகவும் மொசமாகப் பரவக்கூடிய பிரித்தானியக் கொரோனா வைரசின் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 பேரிற்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 40 பேரிற்குச் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை இல்-து-பிரான்சின் பிராந்திய சுகாதார நிறுவனத்தின் (Agence régional de Santé) தலைமை இயக்குநர் ஒரெலியோன் ரூசோ (Aurélien Rousseau) இன்று ஊடகங்களிற்குத் தெரிவித்துள்ளார்.

மிகவும் விரைவாக நடவடிக்கைகள் எடுப்பதற்கும், சோதனைகள் செய்வதற்கும் பிராந்திய சுகாதார நிறுவனத்தின் அணிகள் தயார் நிலையில் இயங்கிக் கொண்டிருப்தாக, தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இல்-து-பிரான்சிற்குள் உள்ள, 1.130 தீவிரசிகிச்சைக் கட்டில்களில் 50% இற்கு மேல் ஏற்கனவே கொரோனாத் தொற்று நோயாளிகளால் நிரம்பி உள்ளதாகவும், மிகவும் விரைவாக இங்கு நோயாளிகள் அதிகரிக்கும் ஆபத்தும் உள்ளதாகவும் பிராந்திய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.