Pantin நகரில் கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Pantin, Seine-Saint-Denis நகரில் இக்கைது சம்பவம் புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. இங்குள்ள rue Voltaire வீதியில் குற்றவியல் தடுப்புப் பிரிவினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். காலை 11.30 மணி அளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த ஒருவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளனர். ஆனால் அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் தொடர்ந்து பயணித்துள்ளார்.
பின்னர் காவல்துறையினரால் துரத்திச் செல்லப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த பையை சோதனையிட்டபோது அதற்குள் 3.1 கிலோ எடையுள்ள கஞ்சா பொதிகள் கிடந்துள்ளனர்.
பின்னர் அவர் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார்.
Pantin நகரில் உள்ள குற்றவாளியின் வீடு காவல்துறையினரால் சோதனையிடப்பட்டது. அதன்போது அங்கு €35.000 யூரோக்கள் ரொக்கப்பணம் இருந்துள்ளது. கணக்கில் காட்டப்படாத அந்த பெருந்தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.