நாளை திங்கட்கிழமையில் இருந்து, முதியோர் இல்லங்களில் இல்லாத, 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் அனைவரிற்குமான கொரேனாத் தடுப்பு ஊசிகளின் முதல் அலகு பிரான்ஸ் முழுவதும் போடப்பட உள்ளது.
இந்தவகையில் 75 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5 மில்லியன் பேர் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முன்பதிவுகள் வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பித்துள்ளது. இதுவரை ஒரு மில்லியனிற்கும் அதிகமான முன்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
75 வயதிற்கு மேற்பட்டவர்களுடன், கொரோனத் தொற்று இலகுவாக ஏற்படக் கூடிய ஆபத்துள்ள, நீண்டகால் நோய்கள், மற்றும் ஆபத்தான நோய்கள் உள்ள எட்டு இலட்சம் (800.000) பேரிற்கும் கொரொனத் தடுப்பு ஊசிகள் போடப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதற்காகப் பிரான்ஸ் முழவதும் 833 தடுப்பு ஊசி மையங்கள் முதற்கட்டமாகத் திறக்கப்பட்டுள்ளன.
தற்போதைக்கு அனைத்து முன்பதிவுகளும் நிரம்பிஉள்ள நிலையில் சில நாட்களின் பின்னரே, மேலதிகப் பதிவுகள் செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.