Tue. Mar 2nd, 2021

 இன்று பிற்பகல் 14h00 மணியளவில் 22 வயது இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். Pierrefitte (Seine-Saint-Denis) இல் இந்தக் கொலை நடந்துள்ளது.

 இங்குள்ள Jean-Vilar பகுதியில் வசிக்கும் இளைஞன் அங்குள்ள தனிவீட்டுப் பகுதிகள் அமைந்துள்ள ue Pierreபகுதியில் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

இவர் மீது இரண்டு துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்துள்ளன. அதிலொன்று இருதயத்தைத் துளைத்துச் சென்றுள்ளது. 

உடனடியாக அவசரசகிச்சைப் பிரிவினர் முயற்சி செய்தும் பயனின்றி அங்கேயே சாவடைந்துள்ளார்.

கொNலையாளி தப்பித்திருந்தாலும் அவன் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கொலையுண்டவரும் கொலை செய்தவரும், ஒன்றாகச் சிறையில் இருந்தவர்கள் என்றும் காவற்துறையினரின் விசாரணைப்பிரிவினர் தெரிவிவித்தள்ளனர்.

Seine-Saint-Denis யின் காவற்துறையினர் விசாரணைகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.

share

By Editor

error: Alert: Content is protected !!