Tue. Mar 2nd, 2021

இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 17ம் திகதி, பிரான்சில் மொத்தமாக 422.127 பேரிற்கு முதல் அலகு கொரோனாத் தடுப்பு ஊசிகள் போடப்பட்டுள்ளன.

இதில் இல்-து-பிரான்சில் (Ile-de-France) மட்டும் 7.787 பேரிற்குத் தடுப்பு ஊசிகள் போடப்பட்டுள்ளன.

தொற்றுகள் மிக அதிகமான 

Auvergne Rhône-Alpes இல் 45.378 பேரிற்கும்

Nouvelle-Aquitaine இல் 44.767 பேரிற்கும் கொரோனாத் தடுப்பு ஊசிகள் போடப்பட்டுள்ளன.

Normandie யில் 100.000 பேரிற்கு 946 பேர் என்ற விகிதத்திலும்

Bourgogne Franche-Comté யில் 100.000 பேரிற்கு 883 பேர் என்ற விகிதத்திலும் 

கொரோனாத் தடுப்பு ஊசிகள் போடப்பட்டுள்ளன.

நாளை திங்கட்கிழமை 75 வயதிற்கு அதிகமானோர்க்கும், பெரும் நோய் உள்ளவர்களிற்கும் கொரோனாத் தடுப்பு ஊசிகள் போடப்படுவதால், சில தினங்களில், கொரோனாத் தடுப்பு ஊசிகள் போடப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

share

By Editor

error: Alert: Content is protected !!