Tue. Dec 1st, 2020

 பரிசின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான  Disneyland கேளிக்கை விடுதி மூடப்படுகின்றது.

பிரான்சில் உள்ளிருப்பு சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதிலிருந்து, அத்தியாவசியம் அற்ற அனைத்து நிலையங்களும் மூடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது Marne-la-Vallée, Seine-et-Marne, நகரில் உள்ள Disneyland வளாகமும் இணைகிறது. நேற்று வியாழக்கிழமை இத்தகவலை  Disneyland நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் பெப்ரவரி (2021) மாதம் வரை இந்த கேளிக்கை வளாகம் மூடப்படுவதாக அறிவித்துள்ளது. 

இந்நிலையில், கிருஸ்துமஸ் விடுமுறையின் போது மேற்கொள்ளப்பட்ட முன்பதிவுகளை இரத்துச் செய்யாமல். முன்பதிவுகள் மேற்கொண்டவர்களை மாத்திரம் அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக டிசம்பர் 19 ஆம் திகதியில் இருந்து ஜனவரி 3 ஆம் திகதி வரை  Disneyland வளாகத்தை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதன்போது புதிய முன்பதிவுகள் எதுவும் ஏற்றுக்கொள்ள போவதில்லை எனவும் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

share

By Editor

error: Alert: Content is protected !!