Thu. Nov 26th, 2020

பிரான்சில் பொரோனாச் சாவுகளின் எண்ணிக்னை 47.000 இனை நெரங்கிக் கொண்டிருக்க, கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் தொகை இரண்டு மில்லியைனத் தாண்டி உள்ள நிலையில், மீண்டும் அரசாங்கத்திற்குரிய நெருக்கடி அதிகரித்துள்ளது.

இதனால் இன்று புதன்கிழமை, விஞ்ஞானக்குழு உள்ளடங்கிய பாதுகாப்புச் சபையினை, எமானுவல் மக்ரோன் கூட்டி உள்ளார்.

இதன் மூலம் அடுத்த வார ஆரம்பத்தில், புதிய கட்டுப்பாடுகள், புதிய தளர்வுகள் போன்றவற்றை, தொலைக்காட்சியில் ஜனாதிபதி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

நேற்று மீண்டும் 40.000 இற்கு அதிகமானவர்களிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் புதிய dépistage antigénique rapide முறையிவான விரைவுப் பரிசோதனையின் கொரோனத் தொற்றுத் தகவல்களும் இன்னமும் மேற்குறிப்பிட்ட தொற்றாளர்கள் தொகையில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது அரசிற்கு நெருக்கடியை வழங்கி உள்ளது.

share

By Editor

error: Alert: Content is protected !!