Thu. Nov 26th, 2020

தேசிய ஜொந்தாம் அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

நடமாடும் இராணுவ காவல்துறை (blindé de gendarmerie mobile) அதிகாரியான குறித்த அதிகாரி, செவ்வாய்க்கிழமை இரவு தனது சேவைத் துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். Versailles-Satory (Yvelines) நகரில் பணிபுரியும் குறித்த அதிகாரி இரண்டு இளம் பிள்ளைகளின் தந்தை எனவும், நாற்பது வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வேலை நிமித்தம் காரணமாக தனது குடும்பத்தை விட்டு தொலைவில் வசித்ததாகவும், குடும்பத்தினர் Mont-de-Marsan (Landes) நகரில் வசிப்பதாகவும் அறிய முடிகிறது. 

இவ்வருடத்தில் இடம்பெறும் 8 ஆவது ஜொந்தாம் அதிகாரியின் தற்கொலை இதுவாகும். முன்னதாக கடந்த செப்டம்பரில் 49 வயதுடைய ஜொந்தாம் பிரிகேடியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

share

By Editor

error: Alert: Content is protected !!