Thu. Nov 26th, 2020

கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகலின் போது இடம்பெற்றுள்ளது. Cergy (Val-d’Oise) நகரில் இளைஞர்களுக்கு இடையே இடம்பெற்ற குழு மோதலில் 24 வயதுடைய இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டான். கத்திக்குத்துக்கு இலக்காகி பலத்த காயமடைந்து சாவடைந்திருந்தான். 

இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும், இன்று புதன்கிழமை காலை வரை எவரும் கைது செய்யப்படவில்லை. 

கொல்லப்பட்ட இளைஞன் போதை வஸ்துக்கு அடிமையானவன் எனவும், இந்த குழு மோதலுக்குரிய காரணம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் அறியமுடிகிறது.

share

By Editor

error: Alert: Content is protected !!