Thu. Nov 26th, 2020

மிக நீண்ட கால இழுபறிக்குப் பின்னர், தற்போது பரிசில் ‘நகரசபை’ காவல்துறையினரை உருவாக்க பாராளுமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோவின் நீண்ட நாள் கனவு இன்று நனவாகியுள்ளது. பரிசுக்கு என தனியே ‘நகரசபை காவல்துறை’ ஒன்றை உருவாக்குவது தொடர்பாக இன்று வியாழக்கிழமை காலை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இடம்பெற்றது. வாக்கெடுப்பின் முடிவு சாதமாக அமைந்ததைத் தொடர்ந்து பாராளுமன்றம் இந்தற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 

<<எனது நீண்ட நாள் கனவு, இரண்டு வருட போராட்டம் இன்று நனவாகியுள்ளது>> என ஆன் இதால்கோ ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

தவிர, இந்த நகரசபை காவல்துறை பிரிவு, ‘பரிஸ் காவல்துறை’ தலைமைச் செயலகத்தின் கீழ் மாத்திரமே இயங்கும் எனவும், பரிஸ் மக்களின் தின வாழ்க்கையில் இடம்பெறும் குற்றங்களுக்கு எதிராகவும், போதைபொருள் கடத்தலுக்கு எதிராகவும் தீவிரமாக செயற்படுவார்கள் எனவும் ஆன் இதால்கோ மேலும் குறிப்பிட்டார். 

share

By Editor

error: Alert: Content is protected !!