Thu. Nov 26th, 2020

நவம்பர் 27ம் திகதி திட்டமிடப்பட்டிருந்த, மாபெரும் மலிவு விற்பனைத் தினமான  Black Friday திட்டத்தினை ஒத்திவைக்குமாறு பொருளாதார அமைச்சர் புரூனோ லூ மேயர் (Bruno Le Maire) பெரும் விநியோக நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தியாவசியமற்ற பொருட்களிற்கான வர்த்தக நிலையங்களைத் திறப்பதற்கான திகதியினை இன்னும் சில தினங்களிலேயே அரசாங்கம் அறிவிக்க இருப்பதானால், இதனை ஒத்தி வைப்பதே சிறந்ததாக இருக்கும் என பொருளாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

‘எதிர்வரும் வெள்ளிக்கிழமை, வர்த்தக நிலையங்களைத் திறக்க தகுந்த நாளா என்று கேட்டால் நான் இல்லை என்றுதான் சொல்வேன்’ என்று செனட் சபையில் தெரிவித்த பொருளாதார அமைச்சர்,  Black Friday யினை ஒத்திவைப்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் தயார்நிலையில் வைக்குமாறு விநியோக நிறுவனங்களிற்குத் தெரிவித்துள்ளார்.

 

share

By Editor

error: Alert: Content is protected !!