Thu. Nov 26th, 2020

Isère இல் கிரெனோபிளில் உள்ள Noyarey நகரில் அமைந்துள்ள, அடுத்தவர்களின் உதவியுடன் தங்கியிருக்கும் முதியோர்களின் தங்ககமான EHPAD இல் 24 முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வந்துள்ளனர்.

இந்த முதியோர் இல்லத்தில் உள்ளவர்களிற்குக் கொரோனா தொற்று ஏற்பட்டதில், கடந்த ஒருவாரத்திற்குள் மட்டும் மூன்றில் ஒரு பங்கான எட்டு முதியவர்கள் கொரோனாத் தொற்றினால் சாவடைந்துள்ளனர்.

இது தங்களிற்குப் பெரும் அதிர்ச்சியை அளித்து உள்ளதாகத் தெரிவித்துள்ள இந்த அகத்தின் இயக்குநர், மற்றவர்களிற்குத் தொற்று வராமல் காத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பிரான்சின் முதியயோர் இல்லங்களில், 15.000 இற்கும் மேற்பட்ட முதியவர்கள் கொரோனாத் தொற்றினால் பலியாகி உள்ளமை அதிர்ச்சிக்குரிய விடயமாகும்.

share

By Editor

error: Alert: Content is protected !!