Thu. Nov 26th, 2020

 கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாத் தொற்றினால் 427 பேர் பேர் சாவடைந்துள்ளனர்.

பிரான்சில் கொரோனாத் தொற்றினால் சாவடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது நடந்த 24 மணிநேரச் சாவுகளினால் 46.968 ஆக உயர்ந்துள்ளது.

இதில் வைத்தியசாலைகளில் மட்டும் 32.168 பேர் சாவடைந்துள்ளனர்.

கிட்டத்தட்ட 15.000 பேரிற்கும் அதிகமானோர் முதியோர் இல்லங்களிலும், சமூகப் பராமரிப்பு மையங்களிலும் சாவடைந்துள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்திற்குள் 28.383 பேரிற்குக் கொரோனத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனாத் தொற்றானது இரண்டு மில்லியனைத் தாண்டி,  மொத்தமாக 2.065.138 பேர் கொரோனத் தொற்றிற்கு உள்ளாகி உள்ளனர்.

32.811 பேர் கொரோனாத் தொற்றினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2435 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில்  4.759 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 361 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்சில் தற்போது 4.039 கொரோனாத் தொற்று வலயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

share

By Editor

error: Alert: Content is protected !!