Thu. Nov 26th, 2020

நாற்பது பேர் வரையானவர்கள் இணைந்து காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு Sartrouville (Yvelines) நகரில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள l’avenue du Général de Gaulle வீதியில் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மூன்று காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துள்ளனர். 

அங்கு நாற்பது வரையான நபர்கள் வீதிகளில் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குப்பை தொட்டிகளை வீதியில் இழுத்து வீசி, தீ மூட்டி வீதியினை போர்க்களமாக மாற்றியிருந்தனர்.

வன்முறைகளை தடுக்க முற்பட்ட காவல்துறையினர் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினர்.

 கற்கள் கொண்டும், மேலும் பல பொருட்களை கொண்டும் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசியதோடு, இறப்பர் குண்டுகள் கொண்ட LBD துப்பாக்கியினாலும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இரவு 8 மணிக்கு ஆரம்பித்த இந்த மோதல் இரவு 10.30 மணி அளவிலேயே முடிவுக்கு வந்தது. இதன் முடிவில் 15 வயதுடைய இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிராந்திய காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

share

By Editor

error: Alert: Content is protected !!