Thu. Nov 26th, 2020

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வரும் செவ்வாய்க்கிழமை உரையாற்றுகின்றார் என முன்னதாக நாம் தெரிவித்திருந்தோம். 

இரண்டாம் கட்ட உள்ளிருப்பு தொடரும் என எதிர்பாக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில தளர்வுகள் மக்ரோனால் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமானது சிறு வணிக நிலையங்கள். 

‘அத்தியாவசியமற்ற’ என தெரிவிக்கப்பட்டு தற்போது மூடப்பட்டுள்ள சிறு வணிக நிலையங்கள் வரும் நவம்பர் 28 ஆம் திகதியுடன் மீண்டும் திறக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும், அதையே  ஜனாதிபதி மக்ரோன் பிரதானமாக அறிவிக்க உள்ளதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், கடுமையான சுகாதார நிலமைகள் கடைப்பிடிக்கப்படும் எனவும், அது தொடர்பான புதிய வணிகர்களுக்கிடையேயான சந்திப்பு ஒன்று இன்று வெள்ளிக்கிழமை காலை Bercy நகரில் இடம்பெற்றதாகவும் அறிய முடிகிறது.

share

By Editor

error: Alert: Content is protected !!