Thu. Nov 26th, 2020

பிரான்சின் தொடர்கொலையாளியான மிசேல் பூர்னியே ( Michel Fourniret) உடல் நலக் குறைவினால் Créteil (Val-de-Marne) Henri-Mondor வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை நீதித்துறை வழங்கி உள்ளது.

தற்போது 78 வயதாகும் இந்தத் தொடர் கொலையாளி Fresnes சிறையிலிருந்து வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

1987 இற்கும் 2001 இற்கும் இடையில் ஏழு இளம்பெண்களை இவர் படுகொலை செய்துள்ளார். 2018 இல் மேலும் இரண்டு இ ளம் பெண்களைப் படுகொலை செய்ததையும் இவர் ஒப்புபக்கொண்டிருந்தார்.

மேலும் பல பெண்களை இவர் கொண்டிருக்கலாம் எனவும், தொடர்ச்சியாக இவர் பெண்களைப் புதைத்த இடங்களையும் காண்பித்தும் வந்துள்ளார். இந்நிலையில் இவர் தீவிர உடல் நலக்குறைவிற்கு உள்ளாகி உள்ளார்.

2008 ஆம் ஆண்டில் இவரிற்கு ஆயுட்தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

share

By Editor

error: Alert: Content is protected !!