Thu. Nov 26th, 2020

தாய் ஒருவர் தனது 13 வயதுடைய இரட்டைக் பிள்ளைகளை படுகொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் Somme மாவட்டத்தில் கடந்தவார வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. நாற்பது வயதுடைய தாய் ஒருவரே இவ்வாறு தமது இரணை பிள்ளைகளை படுகொலை செய்துள்ளார். Somme மாவட்ட அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்த நிலையில், சனிக்கிழமை (14 ஆம் திகதி) படுகொலை செய்யப்பட்டவர்களின் தாயார் கொலைக் குற்றவாளி என உறுதி செய்து, கைது செய்யப்பட்டார்.

கைதான பெண்மணி மனநல பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதால், இக்கொலைகளுக்கான காரணம் குறித்து எதுவும் அறியமுடியவில்லை என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிள்ளைகளை கொன்றுவிட்டு, தமது உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற தாயார், தாம் மிகப்பெரிய தவறிழைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அதன் பின்னரே இச்சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், தாயார் கைது செய்யப்பட்டதாகவும் அறிய முடிகிறது. 

share

By Editor

error: Alert: Content is protected !!