Tue. Dec 1st, 2020

இன்று நவம்பர் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் கொரோனா வைரஸ் காரணமாக பதிவான தொற்று மற்றும் சாவு விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. 

அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் மருத்துவமனைகளில் 215 பேர் சாவடைந்துள்ளனர். இதனால் மொத்த சாவு எண்ணிக்கை 48,732 ஆக அதிகரித்துள்ளது. 

அதேவேளை, புதிதாக 13,157 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இதுவரை பிரான்சில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,140,208 ஆகவும் உயர்வடைந்துள்ளது. 

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 4,491 ஆக உள்ளது. 

பிரான்சில் தொற்று மற்றும் சாவு எண்ணிக்கை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகின்றமை பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொற்று வீழ்ச்சி நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மேற்கொள்ள உள்ள அறிவிப்பில் ‘பல தளர்வுகளை’ எதிர்பாக்கலாம் என நம்பப்படுகின்றது. 

share

By Editor

error: Alert: Content is protected !!