Mon. Nov 23rd, 2020

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு குறித்த கருத்துக்கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 

இந்த நவம்பர் மாதத்தில் மக்ரோனின் செல்வாக்கு 3 புள்ளிகள் அதிகதித்து, 38 புள்ளிகளில் இருந்து 41 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான நிக்கோலா சர்கோஷி இதே காலப்பகுதியில் 32 புள்ளிகளுடனும், பிரான்சுவா ஒலோந்து 27 புள்ளிகளுடன் இருந்தனர். 

அதேவேளை, பிரதமர் Jean Castex கடந்த மாதத்தை போல அதே 39 புள்ளிகளுடன் உள்ளார். 

*இந்த கருத்துக்கணிப்பு Journal du Dimanche பத்திரிகைக்காக Ifop நிறுவனம் மேற்கொண்டிருந்தது. நவம்பர் 12 தொடக்கம் 19 வரைக்குட்பட்ட திகதிகளில், 18 வயதுக்கு மேற்பட்ட 1,924 பேரிடம் இணையத்தளம் ஊடாக கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

share

By Editor

error: Alert: Content is protected !!