Tue. Dec 1st, 2020

கடந்த 2017 ஒக்டோபர் மாதம், உடற்பயிற்சிக்காக ஓடச் சென்ற அலெக்சியா (Alexia), காணமற் போய்த் தேடப்பட்ட நிலையில், முக்கால் பகுதி எரிந்த நிலையில் இவரது உடலம் கண்nடுக்கப்பட்டிருந்தது.

இவரின் கொலைக்கான நீதி வேண்டி, அவரது கணவன் ஜொனாதன் தவால் (Jonathann Daval), மற்றும் அலெக்சியாவின் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இதனைத் தொடரந்து நடாத்தப்பட்ட காவற்துறையினரின் விசாரணையின முடிவில், அலெக்சியாவைக் கொன்று எரித்தது, அவரது கணவன் ஜொனாதன் தவால் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

அலெக்சியாவின் பெற்றோரிற்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர் விசாரணையில் இவர் தனது குற்றத்தினை ஒப்புக் கொண்டிருந்தார்.

மேலும் பல ஆதாரங்களுடன் தொடர்ச்சியாக நடாத்தப்பட்ட வழக்கில் நேற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவரிற்கு 25 வருடக் கடுங்காவற்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

‘நான் செய்த காரியத்திற்கு இந்தத் தண்டனை எனக்குத் தேவையானது’ எனத் தீர்ப்பின்போது, ஜொனாதன் தவால் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தக் கொலையும், அதன் தொடர்ச்சியான விசாரணைளும், அந்த நேரத்தில் பரிஸ்தமிழ் வாசகர்களிற்கு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

share

By Editor

error: Alert: Content is protected !!