Tue. Dec 1st, 2020

ஒட்டுமொத்த பிரான்சையுமே உலுக்கிய Alexia  படுகொலை வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

கடந்த 2017 ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதத்தில் Gray நகரில் வசிக்கும் Alexia எனும் பெண் படுகொலை செய்யப்பட்டிருந்தார். முதலில் அவர் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர்  Jonathann Daval புகார் அளித்திருந்தார். அதன் பின்னர் இரு நாட்கள் கழித்து உள்ளூரில் உள்ள வனப்பகுதி ஒன்றில் இருந்து Alexia  இன் உடலத்தை எரிந்த நிலையில் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். 

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், ஒரு சில நாட்களிலேயே Alexia  படுகொலை செய்யப்பட்டு, எரியூட்டப்பட்டதாகவும், அந்த கொடூரச் செயலை மேற்கொண்டவர் அவரது கணவர் Jonathann Daval என்பதையும் கண்டறிந்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

நீண்ட வருடங்களாக இடம்பெற்று வந்த விசாரணையில் Jonathann Daval  தாம் நிரபராதி எனவும், இக்கொலைக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்து வந்துள்ளார். ஆனால் தற்போது நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு சில வாரங்களுக்கு முன்னர், “தாமே Alexia  வினை படுகொலை செய்து, வனப்பகுதியில் வைத்து எரியூட்டியதாக” ஒப்புக்கொண்டுள்ளார். 

அதைத் தொடர்ந்து, Assize (Haute-Saône) நீதிமன்றத்தில் இறுதி தீப்புக்கு வந்தது இந்த வழக்கு. குற்றவாளி  Jonathann Daval  இற்கு 25 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 

********

Alexia படுகொலை வழக்கு பிரான்சில் பல்வேறு சர்ச்சைகளையும், மக்களின் கோபத்தினையும் தூண்டியிருந்தது. பல பெண்கள் அமைப்பு Alexia கொலைக்கு நீதி கேட்டு வீதிகளில் இறங்கியிருந்தனர். பல ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.

******

நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டபோது Alexia இன் தாயார் மற்றும் உடல்நலம் குன்றிய Jonathann Daval  இன் தயார் ஆகியோர் உடனிருந்தனர். “எனது மகன் செய்தது மிக கொடூரமானது. இது அனைவருக்கும் துன்பமானது. ஆனால் இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்.. நான் அவனுடைய தாய். அவன் என்னுடைய மகன். நான் எப்போதும் அவனுக்காக காத்திருப்பேன்!” என தெரிவித்தார். 

share

By Editor

error: Alert: Content is protected !!