Tue. Dec 1st, 2020

தற்கொலைக்கு முயன்ற நபர் ஒருவர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். 

இச்சம்பவம் பா-து-கலே மாவட்டத்தின் Divion (Pas-de-Calais)  நகரில் இடம்பெற்றுள்ளது. வியாழக்கிழமை இரவு 9 மணி அளவில் உள்ளூர் காவல்துறையினருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் ’தமது மருமகன் தற்கொலை செய்யும் நோக்கோடு மகிழுந்தில் வேகமாக பயணிப்பதாக’ தற்கொலைக்கு முயன்றவரின் மாமா காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, துரிதமாக செயற்பட்ட காவல்துறையினர், தற்கொலைக்கு முயன்றவரின் மகிழுந்தை ஒருவழியாக கண்டுபிடித்து செயற்கையாக ‘வீதி போக்குவரத்து நெரிசல்’ ஒன்றை உருவாக்கி, அவரது மகிழுந்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். 

ஆனால் சம்பவம் இங்கு முடிவுக்கு வரவில்லை. 

காவல்துறையினர் தம்மை நெருங்குவதாக அறிந்துகொண்ட குறித்த நபர், வேகமாக மகிழுந்தை விட்டு இறங்கினார். உள்ளூர் தொடருந்து நிலையம் ஒன்றின் அருகில் அமைக்கப்பட்டிருந்த வேலி ஒன்றில் வேகமாக ஏறியுள்ளார். அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ளும் முனைப்போடு அவர் அதில் ஏறுவதை உணர்ந்த காவல்துறையினர், உடனடியாக தங்களது துப்பாக்கியை உருவி எடுத்தனர்.

அது ஒரு மின்சார துப்பாக்கி.

வேலியின் மீது ஏறியவர் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மின்சாரம் தாக்கி அதிர்ச்சியாகி அங்கிருந்து கீழே விழுந்துள்ளார். பின்னர் அவர் மீட்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

share

By Editor

error: Alert: Content is protected !!