Tue. Dec 1st, 2020

டிசம்பர் 1 ஆம் திகதியுடன் கடைகள் வணிக நிலையங்கள் அனைத்துக்கும் திறக்கப்பட அனுமதி அளிக்கப்படும் என பிரதமர்  அறிவித்துள்ளார். 

பிரதமர் Jean Castex, சற்று முன்னர் இத்ததகவலை அறிவித்துள்ளார். டிசம்பர் 1 ஆம் திகதி என உறுதியாக அறிவிக்காமல் “டிசம்பர் 1 ஆம் திகதி அளவில்..’ என அவர் குறிப்பிட்டுள்ளார். <<என்னிடம் இருந்து மிகச் சரியான திகதியை எதிர்பார்க்காதீர்கள். ஆனால் டிசம்பர் 1 ஆம் திகதி அளவில் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படும். ஆனால் உணவகங்களுக்கும், மதுச்சாலைகளுக்கும் இந்த அனுமதி  கிடையாது!>> என பிரதமர் குறிப்பிட்டார். 

அதேவேளை, கொரோனா வைரஸ் காரணமாக இன்று சனிக்கிழமை கிட்டத்தட்ட 476 பேர் சாவடைந்துள்ளதாக  தகவலகள் வெளியாகியுள்ளன. (இது குறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகும்!)

share

By Editor

error: Alert: Content is protected !!