Thu. Nov 26th, 2020

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, ஜனாதிபதி உள்ளிருப்புத் தொடர்பாக வழங்க இருக்கும் உரைக்கான முன்னுரைகள் இப்போதே வெளிவரத் தொடங்கி உள்ளன.

இரண்டாம் உள்ளிருப்பு அறிவிக்கப்படும்போதே, சிபாரிசு செய்யப்பட்ட, தொற்றதிகமான பிராந்தியங்களிற்கு கடுமையான உள்ளிருப்பும் மற்றப் பிராந்தியங்களிற்கு, தளர்வுகளுடன் கூடிய உள்ளிருப்பும் என வைக்கப்பட்ட திட்டம் ஜனாதிபதி எமானுவல் மக்ரோனால் நிராகரிக்கப்பட்டது.

ஆனால் இந்தத் திட்டம், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படலாம் எனவும், இதனையே பிரதமரும் முன்வைத்திருந்தார் எனவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் சிறு வர்த்தக நிலையங்களைத் திறப்பதற்கான அனுமதியும் வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால் உணவகங்களிற்கும் மதுச்சாலைகளிற்கும் அனுமதி வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

share

By Editor

error: Alert: Content is protected !!