Thu. Nov 26th, 2020

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாத் தொற்றினால் 386 பேர் பேர் சாவடைந்துள்ளனர்.

பிரான்சில் கொரோனாத் தொற்றினால் சாவடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது நடந்த 24 மணிநேரச் சாவுகளினால் 48.265 ஆக உயர்ந்துள்ளது.

இதில் வைத்தியசாலைகளில் மட்டும் 32.978 பேர் சாவடைந்துள்ளனர்.

கிட்டத்தட்ட 16.000 பேரிற்கும் அதிகமானோர் முதியோர் இல்லங்களிலும், சமூகப் பராமரிப்பு மையங்களிலும் சாவடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்திற்குள் 22.882 பேரிற்குக் கொரோனத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்றானது இரண்டு மில்லியனைத் தாண்டி,  மொத்தமாக 2.109.170 பேர் கொரோனத் தொற்றிற்கு உள்ளாகி உள்ளனர்.

32.500 பேர் கொரோனாத் தொற்றினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்சில் தற்போது 4.039 கொரோனாத் தொற்று வலயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 1.539 வயோதிப இல்லங்களிலும் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது.

 

share

By Editor

error: Alert: Content is protected !!