Thu. Nov 26th, 2020

2022 ஆம் ஆண்டில் இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் இராணுவ தலைமை அதிகாரி General de Villiers இற்கு பலத்த ஆதரவு எழுந்துள்ளது. 

2022 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பரபரப்புக்கள் இதுவரை ஆரம்பிக்கப்படாத நிலையில், இந்த போட்டியில் இராணுவ தலைமை அதிகாரி General de Villiers போட்டியிட்டால், 20% வீதமான மக்கள் அவருக்கு வாக்குச் செலுத்த ஆர்வமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனமான Ifop இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. பிரான்சில் ஐந்தில் ஒருவர் (20%) General de Villiers இற்கு வாக்கிட தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

2014 ஆம் அண்டில் இருந்து இராணுவ அமைச்சராக இருந்த இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு கோடை காலத்தின் போது, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கும் இவரும் இடையே சில மனக்கசப்பு ஏற்பட்டதை அடுத்து இவர் பதவி விலகியிருந்தார். இராணுவத்துக்கென ஒதுக்கப்படும் நிதியில் மக்ரோன் ‘கஞ்சத்தனம்’ காட்டியதால் அவர் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

share

By Editor

error: Alert: Content is protected !!