Thu. Nov 26th, 2020

பிரெஞ்சு சாகச வீரரான Vince Reffet, துபாயில் திடீர் மரணமடைந்துள்ளார்.

மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படாமல் இத்தகவலை துபாய் ஊடகம் வெளியிட்டுள்ளது. சாகச வீரர் Vince Reffet, உலகின் பல நாடுகளில் தனது சாகச நிகழ்வுகளால் ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர். குறிப்பாக பேஸ்-ஜம்ப் எனும் உயரத்தில் இருந்து குதிக்கும் சாகச நிகழ்வுகளை அடிக்கடி மேற்கொள்ளும் இவர், உலகின் மிக உயரமான கட்டிடம் என கருதப்படும் துபாஉஇன் புர்ச்-கலீஃபா கட்டிடத்தின் உச்சியில் இருந்து பேஸ் -ஜம்ப் செய்து உலகத்தையே தன் பக்கம் திருப்பினார். 

இந்நிலையில், நவம்பர் 17 ஆம் திகதி துபாயில் பயிற்சி ஒன்றில் ஈடுபட்டிருந்த Vince Reffet விபத்துக்குளாகி சாவடைந்துள்ளதாக உள்நாட்டு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

மிக உயரத்தில் இருந்து இவர் பறப்பதால் இவருக்கு ‘ஜெட் மேன்’ என சர்வதேச ஊடகங்கள் பெயரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

share

By Editor

error: Alert: Content is protected !!