Tue. Dec 1st, 2020

மூன்று திருடர்கள் காவல்துறையினர் போன்று போலியாக வேடமணிந்து முதியவர் ஒருவர் வீட்டில் கொள்ளையடித்துள்ளனர். 

இச்சம்பவம் சனிக்கிழமை Sceaux நகரில் இடம்பெற்றுள்ளது. இங்கு வசிக்கும் 95 வயதுடைய முதியவர் ஒருவரின் வீட்டுக்கு இரண்டு காவல்துறையினர் வந்திருந்தனர். அவர்கள் குடிநீர் விநியோக திருத்துணர் ஒருவரை கைது செய்து அழைத்து வந்துள்ளனர்.  அவர் போலியான நபர் எனவும், இங்குள்ள பல வீடுகளில் அவர் திருடியுள்ளார் எனவும், அந்த பட்டியலில் உங்கள் வீடும் உள்ளது எனவும் காவல்துறையினர் முதியவரிடம் தெரிவித்து அவரை நம்ப வைத்துள்ளனர். 

பின்னர், முதியவரது சேமிப்பு பெட்டகத்தை சோதனையிடவேண்டும் என காவல்துறையினர் தெரிவித்து, அது அமைந்திருக்கும் இடத்தையும் கேட்டு அறிந்துகொண்டனர். 

பின்னர் காவல்துறையினர் சேமிப்பெட்டகத்தை திருடிக்கொண்டு அங்கிருந்து ஒடியுள்ளனர். மொத்தமாக 40,000 யூரோக்கள் ரொக்கப்பணமும், மேலும் பல பெறுமதியான பொருட்களும் திருடப்பட்டுள்ளன. அதன் பின்னரே வந்திருந்த மூவருமே போலியானவர்கள் என முதியவருக்கு தெரியவந்துள்ளது. 

பின்னர் முதியவர் காவல்துறையினரை அழைத்து நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

share

By Editor

error: Alert: Content is protected !!