Sat. Jan 23rd, 2021

சமீபத்தில் பரிசின் புறநகர் ஒன்றில் விருந்து விழா ஒன்றில் கலந்துகொண்ட 16 பேருக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டிருந்தது. அதே போன்றதொரு சம்பவம் தற்போது மார்செ நகரில் இடம்பெற்றுள்ளது.

மார்செயின் 6 ஆம் வட்டாரத்தில் சனிக்கிழமை நள்ளிரவு பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. rue Berlioz வீதியில் உள்ள தேநீர் அருந்தகம் ஒன்றில் இந்த விருந்து பாரில இசை முழங்க இடம்பெற்றது. உள்ளிருப்பு காரணமாக குறித்த அருந்தகம் மூடப்பட்டிருந்த நிலையில், சட்டத்தை மீறி இந்த விழா இடம்பெற்றிருந்தது. 

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைவருக்கு தண்டப்பணம் அறவிட்டனர். மொத்தமாக 45 பேருக்கு தலா 135 யூரோக்கள் வீதம் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. 

அதேவேளை, விருந்து விழாவை ஏற்பாடு செய்திருந்த நபர்கள் கைது செய்யப்பட்டதோடு, சட்டத்தை மீறி அருந்தகத்தை திறந்த உரிமையாளரும் கைது செய்யப்பட்டார். 

share

By Editor

error: Alert: Content is protected !!