Sat. Jan 16th, 2021

பிரெஞ்சு காவல்துறை மற்றும் ஜொந்தாமினருக்கு புதிய வசதிகளுடன் கூடிய வாகனம் வழங்கப்பட உள்ளது. 

Peugeot நிறுவனத்தின் 5008 எனும்  SUVs வகை மகிழுந்துகளே வழங்கப்பட உள்ளது. மொத்தமாக 1,263 மகிழுந்துகள் இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளன. artense gray என அழைக்கப்படும் கிட்டத்தட்ட  சாம்பல் நிறமுறைய இவ்வகை மகிழுந்துகள் 130 குதிரை சக்தி கொண்டது. அனைத்து மகிழுந்துகளும் பிரான்சிலேயே தயாரிக்கப்படுகின்றன. 

 Rennes மற்றும் Sochaux நகரில் தயாரிக்கப்படும் இந்த மகிழுந்துகள் விரைவில் காவல்துறையினருக்கும் ஜொந்தாமினருக்கும் வழங்கப்பட உள்ளன. 

மேலும்,

இவ்வகை மகிழுந்துகள் மிகவும் பாதுகாப்பானவை எனவும், கடந்த இரண்டு வருடங்களாக பிரெஞ்சு உள்துறை அமைச்சர் பயன்படுத்தும் அரச மகிழுந்து இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

share

By Editor

error: Alert: Content is protected !!