Fri. Jan 15th, 2021

இன்று திங்கட்கிழமை நவம்பர்23 ஆம் திகதி பதிவான கொரோனா தொற்று மற்றும் சாவு விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. 

கடந்த சில நாட்களை விட இன்று சாவு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 5001 பேர் மருத்துவமனைகளில் சாவடைந்துள்ளனர். இதனால் மொத்த சாவு எண்ணிக்கை 49,232 பேராக அதிகரித்துள்ளது.

அதேவேளை, இதே 24 மணிநேரத்தில் மிக மிக குறைந்த அளவான வெறுமனே 4500 பேருக்கு மாத்திரமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த தொற்று எண்ணிக்கை இரண்டு மில்லியனை கடந்து தற்போது 2,144,660 பேராக அதிகரித்துள்ளது. 

தொற்று வீதமும் நேற்று ஞாயிற்றுக்கிழமையோடு ஒப்பிடுகையில் 0.7% வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது தொற்று வீதம் 13.3% ஆக உள்ளது.

31,449  பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 4,438 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

share

By Editor

error: Alert: Content is protected !!