Sat. Jan 23rd, 2021

பிரான்சின் முன்னாள் ரக்பி வீரர் Christophe Dominici சற்று முன்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

48 வயதுடைய disused building இன்று செவ்வாய்க்கிழமை நண்பகலின் பின்னர் Saint-Cloud (Hauts-de-Seine) நகரில் உள்ள பூங்கா ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காவல்துறையினர் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, பல மீற்றர் உயரத்தில் இருந்து விழுந்து அவர் சாவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த பூங்காவில் உள்ள கைவிடப்பட்ட கட்டிடம் ஒன்றின் கூரையில் அவர் ஏறியுள்ளார். அதன் பின்னரே அவர் அங்கிருந்து விழுந்துள்ளார். 20 மீற்றர் உயரத்தில் இருந்து அவர் வீழ்ந்ததாகவும், 2.30 மணிக்கு இச்சம்பவம் பதிவானதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர். 

முன்னாள் ரக்பி வீரரான Christophe Dominici, ஐந்து தடவைகள் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

share

By Editor

error: Alert: Content is protected !!