எயார் பிரான்ஸ் விமான சேவைகளின் முன் பதிவுகள் உச்சத்தை தொட்டுள்ளன.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்றைய நாளில் சில புதிய தளர்வுகளையும், கிருஸ்துமஸ் விடுமுறைக்கான தளர்வுகளையும் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து SNCF நிறுனத்தின் இணையத்தளம் நின்றுபோகும் அளவுக்கு முன் பதிவுகள் குவிந்துள்ளது.
அதைத் தொடர்ந்து தற்போது எயார் பிரான்ஸ் நிறுவனத்தின் விமான சிட்டைகளும் முன்பதிவில் மலையாய் குவிந்துள்ளது. வழக்கமான கிருஸ்துமஸ் விடுமுறையின் போது பதிவாகும் முன் பதிவுகளை விட நான்கு மடங்கு அதிகமாக இம்முறை முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பிரதானமாக உள்நாட்டுக்கான பயணச்சிட்டைகளே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.