Sat. Jan 23rd, 2021

ஒரு மணிதனின் வாழ்வு விரைவான நேரத்தினால் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு மனிதனின் மாற்று இருதயமானது, பிரான்சின் மருத்து வரலாற்றில் முதன்முறையாக அதி விரைவுத் தொடருந்தான TGV யில் கொண்டு வரப்பட்டு, மாற்று இருதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மிக அவசரமாக வைத்தியசாலையில் மாற்றப்பட வேண்டிய இருதயம், அதனை வழங்கியவரின் இடத்திலிருந்து மிக விரைவாக கொண்டு வரப்படல் அவசியமாகியது. மிகவும் பாதகாப்பாகக் கொண்டு வரப்பட வேண்டிய இருதயம், வழமையாக  விமானம், அல்லது உலங்கு வானூர்தியிலேயே கொண்டு வரப்படல் வேண்டும். ஆனால் அதற்கு வானிலை ஒத்துழைக்கவில்லை.

வைத்தியர்கள் அவசர முடிவை எடுத்து, இந்த மாற்று இருதயத்தை, TGV யில் நான்கு மணித்தியாலங்களிற்குள் கொண்டு வரச் செய்து, சத்திர சிகிச்சையை திறமையாக முடித்துள்ளனர்.

நோன்சி நகரத்தில் இறந்த ஒருவரின் இருதயத்தை, குடும்பத்தாரின் அனுமதியுடன் எடுத்து, உடனடியாக வுபுஏ யில் அனுப்பப்பட்டு பத்திரமாகக் கொண்டு வரப்பட்டுக் காவற்துறையினரின் பாதுகாப்புடன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

TGV யில் ஏற்கனவே 870 சிறுநீரகங்கள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

share

By Editor

error: Alert: Content is protected !!