Tue. Jan 26th, 2021

மற்றவர்களின் உதவியுடன் தங்கியிருக்கும் முதியோர் இல்லங்களான EHPAD (établissements d’hébergement pour personnes âgées dépendantes) களில் தங்கியிருப்பவர்களிற்கே முதற்கட்ட விநியோகத்தில் வரும் தடுப்பூசிகள் வழங்கப்படல் வேண்டும் என பிரான்சின் அதியுயர் சுகாதார ஆணையமான HAS (Haute Autorité de santé)  இன்று அறிவித்துள்ளது.

மிகவும் பலவீனமானவர்களே முதலில் பாதுகாக்கப்படல் வேண்டும் என இந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆனாலும் முதற்கட்டத் தடுப்பூசிகளின் பக்க விளைவுகளை இங்கு பரிசோதிக்க பிரான்சின் அதியுயர் சுகாதார ஆணையம் முயல்கின்றது என்ற கடுமையான விமர்சனங்கள் எழுவதும் தவிர்க்க முடியாதவையாகவே உள்ளது.

share

By Editor

error: Alert: Content is protected !!