ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மீண்டும் நேரலையில் தோன்றவுள்ளார்.
அண்மையில் தொலைக்காட்சி நேரலையில் தோன்றிய மக்ரோன், தற்போது சமூகவலைத்தளங்களூடாக நேரலையில் தோன்ற உள்ளார். Brut எனும் ஊடகம் ஒன்றுக்கு மக்ரோன் செவ்வி வழங்க உள்ளார். நேரடியாக வழங்கப்படும் இந்த செவ்வி, பேஸ்புக், டுவிட்டர் மற்றும் யுடியூப்பிலும் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.
வரும் வியாழக்கிழமை இந்த செவ்வி நேரலையாக ஒளிபரப்பாக உள்ளது. இந்த செவ்வியின் போது சமீபத்தைய சர்ச்சைகள் குறித்த கேள்விகளுக்கு மக்ரோன் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.