RER C தொடருந்து போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை காலை 13 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்ற விபத்து ஒன்றை அடுத்தே இந்த போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன. இங்கு RER C தொடருந்து பயணிக்கும் தண்டவாளத்தின் மீது பாரிய அளவுடைய சிமெந்து தூண் ஒன்று விழுந்துள்ளது. இதனால் பல்வேறு நகரங்களுக்கு பயணிக்கும் RER C தொடருந்து போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
• Paris-Austerlitz இல் இருந்து Massy-Palaiseau வரையும்,
• Paris-Austerlitz இல் இருந்து Juvisy வரையும்,
• Saint-Quentin இல் இருந்து Yvelines மற்றும் Versailles Chantiers வரையும் இந்த போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன.
மீட்புப்பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.