International
பிரான்ஸ்

Montreuil : Money Gram நிறுவனத்தில் கொள்ளை!!

நேற்று திங்கட்கிழமை Montreuil இல் உள்ள நிறுவனம் இரண்டு நபர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது. 

ஜூலை 15, நேற்று திங்கட்கிழமை காலை இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. Montreuil இன் Avenue Théophile Sueur வீதியில் உள்ள Money Gram நிறுவனத்துக்குள் ஆயுதத்துடன் நுழைந்த இரண்டு நபர்கள் அங்கிருந்த நபர்களை மிரட்டி, பணத்தினை கொள்ளையிட்டுள்ளனர். மொத்தமாக €25,850  ரொக்கப்பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. 

கொள்ளையர்கள் கண்ணீர்புகை வீசி அங்கிருந்த ஊழியர்களை திணறச்செய்ததாக அறிய முடிகிறது. அதைத் தவிர வேறு எந்த தாக்குதல்களும் இடம்பெறவில்லை எனவும், இரு கொள்ளையர்களும் பணத்தினை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!