International
பிரான்ஸ்

156 கி.மீ வேகத்தில் பயணித்த மகிழுந்து! – உள்ளே 14 வயது சாரதி..!

மணிக்கு 156 கி.மீ வேகத்தில் பயணித்த மகிழுந்து ஒன்றை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், உள்ளே சாரதி இருக்கையில் 14 வயது சிறுவன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை Pellerin (Loire-Atlantique) இல் இடம்பெற்றுள்ள போதும், இன்று செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் இத்தகவலை வெளியிட்டுள்ளனர். அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடிய நெடுஞ்சாலையில், 156 கி.மீ வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்த  மகிழுந்து ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் மகிழுந்தை சோதனையிட்ட போது, மகிழுந்தின் சாரதி 14 வயதுடைய சிறுவன் என தெரியவந்துள்ளது. தவிர, 17, 18, 19 வயதுடைய மேலும் மூன்று சிறுவர்களும் மகிழுந்துக்குள் இருந்துள்ளனர். 

அவர்கள் நால்வரும் இணைந்து குறித்த Peugeot 206 வகை மகிழுந்தை திருடிக்கொண்டு சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது.  அதை தொடர்ந்து காவல்துறையினர் நால்வரையும் கைது செய்தனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!