International
பிரான்ஸ்

மீண்டும் பிரான்சை தாக்க வரும் வெப்பம்! – முதல்கட்டமாக 21 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை..!!

வரும் வாரத்தில் மீண்டும் பிரான்சை கடும் வெப்பம் வாட்டியெடுக்க உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. 40°C வரை அதிகபட்ச வெப்பம் நிலவும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

தென் மேற்கு மற்றும் மத்திய கிழக்கு மாவட்டங்களை குறி வைத்து வெப்பம் தாக்க உள்ளது. ஜூலை 22 திங்கட்கிழமை நாளை காலை முதல் 21 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக Météo France அறிவித்துள்ளது. வேகமாக அதிகரிக்கும் இந்த வெபம், விரைவில் நாடு முழுவதும் பரவும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

Ardèche (07), 

Ariège (09), 

Aveyron (12), 

Charente (16), 

Charente-Maritime (17), 

Corrèze (19), 

Dordogne (24), 

Drôme (26), 

Haute-Garonne (31),

Gers (32), 

Gironde (33), 

Isère (38), 

Landes (40), 

Lot (46), 

Lot-et-Garonne (47), 

Pyrénées-Atlantiques (64), 

Hautes-Pyrénées (65), 

Rhône (69), 

Tarn (81), 

Tarn-et-Garonne (82),

Haute- Vienna (87)

ஆகிய 21 மாவட்டங்களுக்கு நாளை காலை முதல் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அதிகபட்சமாக 36°C இல் இருந்து 40°C வரையான வெப்பம் நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!