International
பிரான்ஸ்

இயக்குனர் Jean-Pierre Mocky மரணம்..!!

பிரெஞ்சு சினிமா உலகின் பிரபல இயக்குனர் Jean-Pierre Mocky, தனது 86 ஆவது வயதில் சாவடைந்துள்ளார். 

Jean-Pierre Mocky இன் மரணத்தை அவரது மகன் இயக்குனர், நகைச்சுவை நடிகர் Stanislas Nordey நேற்று உறுதிப்படுத்தியுள்ளார். நேற்று வியாழக்கிழமை அவரது இல்லத்தில் வைத்து உடல்நலக்குறைவினால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Jean-Pierre Mocky ஒரு இயக்குனராக மட்டுமில்லாது, தயாரிப்பாளராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், தயாரிப்பாளராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார். 

60 திரைப்படங்களுக்கு மேல் இயக்கியுள்ள இவர், நாற்பதுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். 

நீஸ் மாவட்டத்தில் ஜூலை 6 ஆம் திகதி, 1929 ஆம் ஆண்டு இவர் பிறந்திருந்தார். Les Casse-pieds எனும் திரைப்படத்தில் நடிகராக 1948 ஆம் ஆண்டு பிரவேசம் ஆனார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!